🔴 துபாய் ஆட்சியாளரின் சகோதரர் காலமானார்!

0

ஷேக் அகமது பின் ராஷித் அல் மக்தூம் மறைவு – 10 நாட்கள் துக்க காலம் அறிவிப்பு

துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் சகோதரர் ஷேக் அகமது பின் ராஷித் அல் மக்தூம் தனது 76ஆவது வயதில் காலமானார். 

அவரது மறைவையடுத்து, துபாய் முழுவதும் 10 நாட்கள் உத்தியோகபூர்வ துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷேக் அகமது பின் ராஷித் அல் மக்தூம், துபாய் பொலிஸ் மற்றும் பொதுப் பாதுகாப்பின் துணைத் தலைவராக பணியாற்றியதுடன், விளையாட்டுத்துறையிலும் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருந்தார். 

அவருக்கான ஜனாஸா தொழுகை நேற்று (22) துபாயிலுள்ள ஸபீல் கிராண்ட் பள்ளிவாசலில் நடைபெற்றதுடன், பின்னர் உம் ஹுரைர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். 

📰 Iconic Media

#Dubai #UAE #SheikhAhmed #DubaiNews #BreakingNews #IconicMedia

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *