9 வருஷ பயணம். 3 பில்லியன் மைல் தூரம். கடைசியா கண்ணுல சிக்கின ஒரு உலகம்!

0

2006ல கிளம்பின நாசாவோட New Horizons விண்கலம், கும்மிருட்டுல தனியா பறந்து பறந்து 2015ல புளூட்டோவை நெருங்குச்சு. அது அனுப்பின போட்டோவை பார்த்ததும் விஞ்ஞானிகளே ஷாக் ஆயிட்டாங்க.நாம நினைச்ச மாதிரி புளூட்டோ வெறும் ஐஸ் உருண்டை இல்ல.அங்க பல கிலோ மீட்டர் உயரத்துக்கு நீர்ப்பனியால ஆன மலைத்தொடர் இருக்கு. உறைஞ்சு போன நைட்ரஜன் ஐஸ்ல பரந்து விரிஞ்ச சமவெளி இருக்கு. பள்ளத்தாக்குகள் இருக்கு. ஒரு காலத்துல அங்க நில அசைவுகள் நடந்ததுக்கான தடயங்களும் இருக்கு.அதாவது, இத்தனை தூரத்துல, இத்தனை குளிர்ல இருக்குற ஒரு சின்ன உலகம், நாம நினைச்சதை விட உயிர்ப்போட இருந்திருக்கு.இதுக்கு முன்னாடி புளூட்டோன்னா நமக்கு தொலைநோக்கில தெரிஞ்ச ஒரு சின்ன வெளிச்சப்புள்ளி மட்டும் தான். முதல் தடவையா அதோட மலையை, தரையை நேர்ல பார்த்த மாதிரி ஒரு உணர்வு இந்த படங்கள் கொடுத்துச்சு.பூமியில இருந்து 3 பில்லியன் மைல் தள்ளி இருக்குற ஒரு உலகத்தோட முகத்தை மனுஷன் முதல் தடவ பார்த்த தருணம் இது.புளூட்டோவே இவ்வளவு ஆச்சரியம் வச்சிருந்தா, அதுக்கு அந்தப் பக்கம் இருக்குற இருட்டுல இன்னும் என்னென்ன ரகசியம் ஒளிஞ்சிருக்கோ?#NASA #NewHorizons #Pluto #SpaceExploration

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *