காட்டு யானை தாக்குதல் – 15 வயது பாடசாலை மாணவன் காயம்…

அம்பாறை, மத்திய முகாம் 03 பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (02) அதிகாலை நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சேனைக்குடியிருப்பில் இருந்து மத்திய முகாம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.iconicmediasl.com