இம்ரான் கானின் சகோதரி அலீமா காஹ்ன் கைது!

0

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா காஹ்ன், லாஹூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் இம்ரான் கானின் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதி பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது தாய் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அலீமாவின் மகன் குற்றம்சாட்டியுள்ளதுடன், அவரை உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அடுத்த வாரம் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அலீமா காஹ்ன் தலைமை வகிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Iconic Media | www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *