🇮🇳 அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

0

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கக்கூடிய மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முக்கிய முன்னுரிமை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், எண்ணெய் கொள்முதல் தொடர்பான முடிவுகள் உலகளாவிய சந்தை நிலவரம் மற்றும் இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களை சமாளிக்க, வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்படும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *