இலங்கை – சீனா உறவுகளை வலுப்படுத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய – சீன தூதுவர் சந்திப்பு……….



இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் புதிய தூதுவர் வேய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செப்டெம்பர் 16ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2027ஆம் ஆண்டில் இலங்கை – சீனா இராஜதந்திர உறவுகள் 70 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
www.iconicmediasl.com