யோஷித ராஜபக்ஷ, டேசி பொரஷ்ட் வழக்கு நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு….

நிதிச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி பொரஷ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இன்றைய விசாரணையில் யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில், டேசி பொரஷ்ட் மருத்துவக் காரணங்களால் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தார்.
சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 57 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டதாக குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
www.iconicmediasl.com