அரச நிறுவனங்களுக்கான தாபன ஒழுக்க விதிக்கோவை தயாரிப்பு தொடர்பில் ஒருநாள் செயலமர்வு


தாபன ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பது தொடர்பான ஒருநாள் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள 244 உள்ளக விவகாரப் பிரிவுகளுக்காக இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேர்மை மேம்பாட்டு பணியகத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சந்திமா விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. பிரசன்ன சந்தித் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.அரச திணைக்களங்கள், அரச நியதிச் சபைகள், மாகாண அமைச்சுகள் மற்றும் மாகாணத் திணைக்களங்களின் உள்ளக விவகாரப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர்.மேலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சுகள் மற்றும் மாகாணத் திணைக்களங்களின் அதிகாரிகள் இணையவழி ஊடாக இந்தச் செயலமர்வில் இணைந்துகொண்டனர்.
Iconicmediasl.com