🚨 நேபாள வெள்ளப் பேரழிவு: இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு!

0

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த குழந்தையொன்று பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையை மீட்ட பின்னர், பெண் ஒருவர் அதனை பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#Nepal #Flood #Rescue #WorldNews

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *