ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லா கப்பல்களை நிறுத்த சிங்கப்பூர் திட்டம்!

0

ஜொகூர் நீரிணையில் சுற்றுக்காவல் பணிகளுக்காக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக ஆளில்லா கப்பல்களை பயன்படுத்த சிங்கப்பூர் கடலோரக் காவல் படை திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

www.iconicmediasl.com

சிங்கப்பூரின் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத கப்பல்களைக் கண்டறிவதற்கும், சந்தேகத்துக்குரிய கப்பல்களைத் திருப்பி அனுப்புவதற்கும் இந்த புதிய ஆளில்லா கப்பல்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் உள்ளிட்ட கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காலப்போக்கில் மாறிவருவதால், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படுவது அவசியம் என கடலோரக் காவல் படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் சிங்கப்பூரை ஊடறுத்துச் செல்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆளில்லா கப்பல்களை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல், வாரத்திற்கு இருமுறை ஆளில்லா கப்பல்கள் சுற்றுக்காவல் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *