ஒலிபெருக்கி பயன்பாடு குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாகப் பின்பற்ற பொலிஸார் அறிவுறுத்தல்!

இலங்கையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களின் பயன்பாடு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இரவு 10.00 மணி வரையும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணி வரையும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத மற்றும் விசேட நிகழ்வுகளுக்குச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படலாம். இருப்பினும், அனுமதி பெற்றிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே கேட்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.