🚨 BREAKING NEWS | சிகிச்சைக்குச் சென்ற 10 நாள் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி!

0

அனுராதபுரத்தில் பெரும் சோகம்!கெபித்திகொல்லாவ – மதவாச்சி பிரதான வீதியின் கோனமரியாவ பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 நாள் பச்சிளம் குழந்தை, தாய் மற்றும் பாட்டி என மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பதவிய பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், பிறந்து வெறும் 10 நாட்களேயான குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக, தாய் மற்றும் பாட்டியுடன் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.⚠️ அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எதிரே வந்த Mitsubishi Montero ரக ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.💔 சிகிச்சைக்காக சென்ற குடும்பத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.#BreakingNews #Accident #Anuradhapura #Kebithigollewa #Madhawachchi #SriLankaNews #TamilNews

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *