பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சிறப்பான வரவேற்பு

“Global Conscious Food Systems” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூட்டான் சென்றடைந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை, பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, உணவு முறைமைகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.