அக்கரைப்பற்று முன்னாள் மேயர் செப்டம்பர் 9 வரை விளக்கமறியலில்

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாஹ், பெண் ஒருவர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.