கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026 தேசிய கனிமக் கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
கனிம வளங்களின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பெறுமதி சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், நாட்டின் கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்தி தேசிய பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், உள்நாட்டு உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குதல் மற்றும் ஆராய்ச்சி–அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டது.