🚨 யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் 77 வயதான மூதாட்டியிடம் கண்டக்டர் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு!

0

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 5.45 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது 77 வயதான தாயாரும் மகளும் பேருந்தில் பயணித்த நிலையில், வவுனியா செல்ல வேண்டிய மகள் தனது தாயாருடன் இரண்டு இருக்கைகளில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கண்டக்டர், குறித்த வயதான பெண்ணிடம் “இது கொழும்பு பஸ்… எழுந்து நின்று வா. வவுனியாவுக்கு உனக்கு இருக்கை இல்லை” எனக் கத்தியதாக பயணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டவை என எந்த அடையாளமும் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பயணி கோரிக்கை விடுத்துள்ளார்.

💔 வயதான பயணிகளிடம் மரியாதையும் பொறுமையும் கடைப்பிடிப்பது அவசியம்.

#யாழ்ப்பாணம் #பஸ்நிலையம் #இபோச #Jaffna #SLTB #News #SriLanka

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *