எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படவுள்ள கார்களின் சோதனை ஓட்டம் தொடக்கம்!

0

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படவுள்ள கார்களைத் தேர்வு செய்வதற்கான சோதனை ஓட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக பல்வேறு SUV வகை வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில வாகனங்களின் விலை சுமார் ரூ.34 இலட்சம் வரை இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

www.iconicmediasl.com

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தொகுதிகளில் மக்கள் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.

இதனுடன், வாகனச் செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 மற்றும் உதவியாளர் செலவுக்காக ரூ.25,000 வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

எனினும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 59 எம்.எல்.ஏக்களும் அரசு வழங்கும் கார்களை ஏற்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

இதனால், எம்.எல்.ஏக்களுக்கான அரசு வாகனத் திட்டம் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதப் பொருளாகியுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *