அம்பாறை மாவட்ட உயிர் காப்புப் பயிற்சியின் இரண்டாம் கட்ட ஆரம்ப விழா சிறப்பாக நடைபெற்றது!

0

“மனித உயிர் காப்போம்… சமூகத்தைப் பாதுகாப்போம்…” என்ற உயரிய நோக்கத்துடன், அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா, இன்று (22.08.2026) காலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவின் நிர்வாக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் இணைந்துள்ளனர்.

அவசரகால மீட்புப் பணிகளின் அவசியம், பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பில் பயிலுனர்களின் பங்கு மற்றும் எதிர்காலப் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்பு விருந்தினர்கள் விளக்கமளித்தனர்.

தன்னார்வத்துடன் மனித உயிர்களைக் காக்கும் உயரிய சேவையில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

www.iconicmediasl.com

✍️ மஜீட். ARM

#மனிதஉயிர்காப்போம்
#சமூகத்தைபாதுகாப்போம்
#உயிர்காப்பு
#அனர்த்தமுகாமைத்துவம்
#அம்பாறை
#சம்மாந்துறை
#இளைஞர்கள்
#EmergencyRescue
#DisasterManagement

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *