மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து,

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
www.iconicmediasl.com
Asmath Raseem