காக்கி நிற சீருடையை மாற்றி, 2027ஆம் ஆண்டு புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

🇱🇰 இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை!
இலங்கை பொலிஸார் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் காக்கி நிற சீருடையை மாற்றி, 2027ஆம் ஆண்டு புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய சீருடையின் நிறம் மற்றும் வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக நீல நிற சீருடை குறித்து பரிசீலிக்கப்பட்ட போதிலும், இலங்கை விமானப்படை ஏற்கனவே நீல நிற சீருடையைப் பயன்படுத்துவதால், வேறு நிறத்தை தெரிவு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சீருடை மாற்றத்துடன் இணைந்து பொலிஸ் அதிகாரிகளின் சம்பள உயர்வு மற்றும் விசேட அபாயக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 தற்போதைய காக்கி நிற பொலிஸ் சீருடை 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.
www.iconicmediasl.com
Asmath Raseem