80வது சுதந்திர தினம்: தேசியக் கொடியேற்றி அரசு விருதுகளை வழங்கிய முதல்வர் விஜய்!

0

www.Iconicmediasl.com

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (15.08.2026) சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி சிறப்பான பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் உயரிய விருதுகளைமுதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவித்தார்.

இதன்போது,

  • தகைசால் தமிழர் விருது
  • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது
  • கல்பனா சாவ்லா விருது
  • முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் நலச் சேவைக்கான சிறப்பு விருதுகள்
  • சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள்
  • மாநில இளைஞர் விருதுகள்

உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

சமூக நலம், சிறந்த நிர்வாகம், மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய விருதாளர்களுக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

முதலமைச்சராக விஜயின் முதல் சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்வாகவும் இது அமைந்தது. 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *