கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Ward Sister கமலேஸ்வரிக்கு கௌரவப் பிரியாவிடை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீண்டகாலம் Ward Sister ஆகப் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் திருமதி எஸ். கமலேஸ்வரி அவர்களுக்கு கௌரவப் பிரியாவிடை நிகழ்வு நேற்று (19.08.2026) நடைபெற்றது.
வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில், வைத்திய அத்தியட்சகர் Dr. I.L.M. றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், Matron, நிர்வாக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவச்சிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, திருமதி கமலேஸ்வரியின் நீண்டகால அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் நினைவுப் பரிசில்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், அவரின் ஓய்வுக்கால வாழ்க்கை சிறப்பாக அமையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஊடகப் பிரிவு
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை
Asmath Raseem | www.iconicmediasl.com