கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: 9 முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஆடை தொடர்பான சர்ச்சையை எதிர்கொண்டுள்ள 9 முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக சமூக மட்டத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
www.iconicmediasl.com
Asmath Raseem
குறித்த பெண் ஊழியர்கள் தங்களது கலாசார உடை தொடர்பான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமை பாராட்டுக்குரியது எனவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு சமூகத்தின் ஆதரவு அவசியம் எனவும் வெளியிட்டுள்ள.
மேலும், குறித்த விவகாரத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டால், முஸ்லிம் சட்டத்தரணிகள் தன்னார்வ அடிப்படையில் அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அந்தப் பதிவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பளம் அல்லது ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டால், பள்ளிவாசல் நிர்வாகங்கள், சமூக அமைப்புகள் மற்றும் வசதியுள்ள தனிநபர்கள் குறித்த ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.