அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டம்பர் 19 முதல் ரூ.1,000 அபராதம்!
www.iconicmediasl.com

Asmath razeem
அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அனைத்து வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகளும் ஆசனப்பட்டி (Seatbelt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதி பேருந்து பயணிகளுக்கும் பொருந்தும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஆசனப்பட்டி பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
2025 செப்டம்பர் 25ஆம் திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, குறித்த விதிமுறை செப்டம்பர் 19 முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.
