வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்றைய தினம் (19.08.2026) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

www.iconicmediasl.com
Asmath razeem
காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றிய தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.