ஓமானில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் CCDயிடம் ஒப்படைப்பு

0

ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என அழைக்கப்படும் கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 மார்ச் 22ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கும் இவர் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவரிடம் CCD அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Asmath Raseem
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *