பேச்சுவார்த்தை இல்லை; உடன்படிக்கை முடிவுக்கு வந்தது: டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கை முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக இன்று (புதன்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளார். மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஈரானிய தலைவர்களின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், அவர்களுடன் தொடர்ந்தும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், “என்னைப் பொறுத்தவரையில் இந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது. ஈரானுடன் தொடர்ந்தும் கையாள்வதும் பேசுவதும் வெறும் கால விரயமே தவிர வேறொன்றுமில்லை” என டிரம்ப் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கைச்சாத்திடப்பட்டிருந்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது முறிவடைந்துள்ளமையால், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேச அரங்கிலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
