முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை: வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு!

0

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *