நீர்கொழும்பு சிறைக்கைதிகள் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடமாற்றம்!

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் 60 கைதிகள் நேற்று (07) மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேவேளை, பொலன்னறுவை சிறைச்சாலைக்கு மேலும் 63 கைதிகள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

400 கைதிகள் மட்டுமே தங்குவதற்கு வசதியுள்ள மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஏற்கனவே 960 கைதிகள் இருந்த நிலையில், தற்போது இந்த இடமாற்றத்தின் மூலம் அங்கு கைதிகளின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிறைச்சாலைக்குள் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *