TIN இலக்கம் கட்டாயம்!……..

0

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல், குறிப்பிட்ட சேவைகளைப் பெறும் போது வரி செலுத்துவதை உறுதிப்படுத்தும் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி,
🔹 வங்கி அல்லது நிறுவனத்தில் கணக்கு ஆரம்பித்தல்
🔹 கட்டிட நிர்மாண அனுமதி பெறுதல்
🔹 மோட்டார் வாகனம் பதிவு செய்தல்
🔹 மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்
🔹 காணி அல்லது காணி உரித்தைப் பதிவு செய்தல்
🔹 வியாபாரம் பதிவு செய்தல்
🔹 இலங்கை கூட்டுத்தாபன நிறுவனங்களின் பங்குகளை மாற்றுதல்
🔹 கடன் அட்டை பெற்றுக்கொள்ளுதல்
போன்ற நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் TIN இலக்கம் அவசியமாகும்.
இதுவரை TIN இலக்கம் பெறாதவர்கள், தேசிய வருமான வரித் திணைக்களத்தின் ஈ-சேவை மூலம் பதிவு செய்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.iconicmediasl.com⁠

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *