பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்…..

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். (26/09/2026) இன்று காலை 4:00 – 4:30 மணியளவில்
வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
www.iconicmediasl.com