அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு……..

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான முறையில் நிர்வகிப்பதுடன், நீண்டகாலமாக நிலவும் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக 2026.06.22ஆம் திகதிய 2494/05 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘அரச உத்தியோகத்தர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு’ நியமிக்கப்பட்டுள்ளது.
சமத்துவமான ஊதியக் கட்டமைப்பை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப எதிர்கால தேவைகளை எதிர்வுகூறுதல், குடிமக்களை மையமாகக் கொண்ட பொறுப்புமிக்க அரச சேவையை உருவாக்குவதற்கான உத்திகளை முன்வைத்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இவ்வாணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
www.iconicmediasl.com