🚨 BREAKING NEWS | இத்தாலி

0

✈️ ஓடுபாதையில் தனியார் ஜெட் மீது கார் மோதி விபத்து!

இத்தாலியின் மிலான் லினாட்டே விமான நிலையத்தில், ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் ஜெட் விமானம் மீது தரைவழிச் சேவை வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று (10) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், விமான நிலையத் தரைக்கட்டுப்பாட்டுச் சேவையில் ஈடுபட்டிருந்த வாகனம் எதிர்பாராதவிதமாக ஜெட் விமானத்தின் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

💥 மோதலில் விமானத்தின் வெளிப்புறப் பகுதி சேதமடைந்துள்ளது.

🙏 அதிர்ஷ்டவசமாக, எவருக்கும் உயிரிழப்போ அல்லது பலத்த காயங்களோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

🔎 விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

⚠️ சம்பவத்தால் லினாட்டே விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் தற்காலிகமாக தாமதமடைந்தன.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *