🚨 வடக்கு, கிழக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு!
🔴 ஆசிரியர் நியமனங்களில் வடக்கு, கிழக்குக்கு முன்னுரிமை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இவ்வருட இறுதியில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறித்த மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்திலும் இம்மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிலையான திட்டமொன்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
📌 வடக்கு | வடமத்திய | கிழக்கு
📚 ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சி!