🚨 மின்னல் தாக்கி 24 வயது கால்பந்து வீரர் மைதானத்திலேயே பலி!

0

தென் தாய்லாந்தில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்குதலில் 24 வயதான Sofwan Awae என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

SAMCOLTS மற்றும் Abu x Nong Sirin அணிகளுக்கு இடையிலான போட்டியின்போதே இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

⚡ மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு வீரர் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மைதானத்திலேயே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#IconicMedia #Thailand #Football #Lightning #BreakingNews #SofwanAwae

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *