குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு ரூ.10 இலட்சம் அபராதம்..!

எல்ல – கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விடுதிக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ரூ.10 இலட்சம் (1 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் குறித்த விதிமீறல் கண்டறியப்பட்டதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது விடுதி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் அபராதத்தை விதித்தது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் வணிக நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உதவி இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் பொதுமக்கள் வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#BreakingNews #IconicNews #SriLanka #Ella #Badulla #ConsumerAffairs #LocalNews #TamilNews