ஒரு தசாப்த அர்ப்பணிப்பு நிறைவு: சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் (நளீமி) ஓய்வு

🎓 ஒரு தசாப்த அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவைக்கு நிறைவு!
சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் அதிபராக கடந்த ஒரு தசாப்தகாலமாக அர்ப்பணிப்புடனும் தியாக உணர்வுடனும் சேவையாற்றிய அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் (நளீமி) அவர்கள், 31.07.2026 ஆம் திகதியுடன் தனது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இலைமறை காயாய் இருந்த தாறுல் உலூம் வித்தியாலயத்தை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்து, கல்வி, ஒழுக்கம் மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் முன்மாதிரிப் பாடசாலையாக உருவாக்கிய பெருமை அவருக்கே உரியது.
மாணவர்களை கல்வியில் மட்டுமல்லாது, நற்பண்பும் நல்லொழுக்கமும் கொண்ட சமூகப் பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
அவரது அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவைக்கு மனமார்ந்த நன்றிகளையும், ஓய்வுக்கால வாழ்விற்கு நல்லாரோக்கியம், அமைதி மற்றும் அல்லாஹ்வின் அருளாசிகளும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.