பிரதமர் ஹரிணி அமரசூரிய SLITHM 45வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு!

0

BMICH-இல் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையின் புதிய பட்டதாரிகள் கௌரவிப்பு

ஜூலை 31 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் (SLITHM) 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் பயிற்சி முடித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு இளம் திறமைகள் முக்கிய பங்காற்றுவார்கள் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

SLITHM நிறுவனத்தின் 45 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த விழா, துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் வகையில் அமைந்திருந்தது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *