சீரற்ற வானிலை: 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை………..

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (21) 38 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை நிலைமையை கருத்திற்கொண்டு, பாடசாலைகளை நடத்துவது அல்லது விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி,
மத்திய மாகாணத்தில் – 35 பாடசாலைகள்
சபரகமுவ மாகாணத்தில் – 1 பாடசாலை
தென் மாகாணத்தில் – 1 பாடசாலை
மேல் மாகாணத்தில் – 1 பாடசாலை
என மொத்தம் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
www.iconicmediasl.com