🌧️ வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு……

கிங் கங்கை மற்றும் களு கங்கை ஆற்றுப் பகுதிகளைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையைக் கருத்திற் கொண்டு, நேற்று (20) வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
www.iconicmediasl.com