மன்னார் வடக்குக் கடலில் ஆபத்தில் சிக்கிய இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு………..

0

மன்னார் வடக்குக் கடல் பகுதியில் ஆபத்தில் சிக்கிய ஒருநாள் மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்களை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினர் இன்று (21) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற ‘IDAY – A – 0126 JFN’ என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட ஒருநாள் மீன்பிடிப் படகு மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பவில்லை.
இதையடுத்து, குறித்த படகைக் கண்டறிந்து மீனவர்களை மீட்பதற்காக கடற்படையின் உதவியை கோரி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், ஆபத்தில் சிக்கியிருந்த படகு மற்றும் அதிலிருந்த இரண்டு மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
www.iconicmediasl.com⁠

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *