அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்………..

சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக தவறான கருத்தொன்றை பதிவிட்டதாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான தீர்ப்பு நேற்று (17) மாலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனோஜனுக்கான தண்டனையை குறைப்பதற்காக அரச தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவ்விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Iconicmediasl.com