🔴 பாகிஸ்தான், பிலிப்பைன்ஸில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு!

கச்சா எண்ணெய் விநியோக நெருக்கடியால் அதிகரிக்கும் விலைகள் – வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத் திட்டம்!
ஹோர்முஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதுடன், சவுதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் 6ஆவது முறையாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
📌 பாகிஸ்தானில் புதிய விலைகள்:
⛽ பெட்ரோல் – லீற்றருக்கு 4.42 ரூபாய் அதிகரிப்பு
➡️ புதிய விலை: 380.24 ரூபாய்
⛽ அதிவேக டீசல் – லீற்றருக்கு 6.10 ரூபாய் அதிகரிப்பு
➡️ புதிய விலை: 409.42 ரூபாய்
இந்த விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் 800 சி.சி.க்கும் குறைந்த இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
🇵🇭 பிலிப்பைன்ஸிலும் எரிபொருள் விலை உயர்வு!
இதேவேளை, பிலிப்பைன்ஸிலும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
🌍 உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடியின் தாக்கம் பல நாடுகளிலும் தொடர்கிறது.