மன்னாரில் ரூ.600 மில்லியன் செலவில் நவீன அவசர சிகிச்சைப் பிரிவு!

0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

🇮🇳 இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் ரூ.600 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் பிரிவு, நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

🏥 2028ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு செல்லாமல், அவசர விபத்து சிகிச்சை மற்றும் நிபுணத்துவ மருத்துவ சேவைகளை தங்களது பிரதேசத்திலேயே பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும், வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர் தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *