சம்மாந்துறையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் அங்குரார்ப்பணம்!

0

மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் செயற்றிட்டங்கள் ஆரம்பம்சம்மாந்துறையில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நிஸ்ரின் சியாத், பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர்களான வை.வீ.எம். நபாஸ், ஹாதிக் இப்றாஹிம், எஸ்.எல்.ஏ. நிஸார் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் மற்றும் உள்ளூராட்சி கீதம் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, உள்ளூராட்சி வாரத்தின் நோக்கம் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பான அறிமுகவுரையும் இடம்பெற்றது.இதன் முதலாம் நாள் செயற்றிட்டமாக, வீடு வீடாகச் சென்று ஆதன வரி நிலுவைகளை அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.சம்மாந்துறை பிரதேசத்தை மேலும் அழகுபடுத்தி, மக்கள் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் உள்ளூராட்சி வாரத்தின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *