🎓🇨🇳 சீனாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் PhD கற்கும் ஆலையடிவேம்பின் பெருமைமிகு மகன்!

🎓🇨🇳 சீனாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் PhD கற்கும் ஆலையடிவேம்பின் பெருமைமிகு மகன்! ❤️👏
இலங்கை நிர்வாக சேவையின் Class I அதிகாரியும், முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான பபாகரன் விநாசித்தம்பி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹
🌏 உலக தரவரிசையில் 37ஆவது இடத்தில் உள்ள சீனாவின் Zhejiang பல்கலைக்கழகத்தில் தனது PhD பட்டப்படிப்பைத் தொடரும் அரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
🇱🇰 இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே நபராகவும், உலகம் முழுவதிலிருந்தும் இடம்பெற்ற கடுமையான போட்டியின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 15 உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராகவும் இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
🏆 இந்த வெற்றி அவருக்கு மட்டுமல்லாது, ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான சாதனையாகும்.
🎓 குறிப்பாக, ஆலையடிவேம்பின் இரண்டாவது PhD பட்டதாரியாக உருவாகவிருப்பது இச்சாதனையை மேலும் சிறப்பிக்கிறது.
அவரது கல்விப் பயணம் சிறப்பாக அமையவும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, பல சாதனைகளைப் படைக்கவும் ஆலையடிவேம்பு மக்கள் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ❤️🙏
வாழ்த்துகள் சேர்! 🎓👏
உங்கள் வெற்றி எங்கள் பெருமை! 🇱🇰❤️
🌐 www.iconicmediasl.com