ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது!

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லுபடியாகாது என இலங்கை உச்சநீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக 2018ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய மன்னிப்பின் மூலம் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த மன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மன்னிப்பு வழங்கப்பட்ட விதம் தன்னிச்சையானதும் சட்டரீதியாக செல்லாததுமாகும் எனத் தீர்மானித்துள்ளது.

www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *