🚍 மேல் மாகாணத்தைத் தாண்டி மெட்ரோ பேருந்து சேவை!

0

காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

📌 இம்மாதத்திற்குள் பேருந்துகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிக்க திட்டம்
📌 மேலும் 50 பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை பத்திரம்
📌 இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 172 பேருந்துகள் வரை சேவை விரிவாக்கம்
📌 எதிர்காலத்தில் தனியார் துறையினருக்கும் மெட்ரோ சேவையில் இணையும் வாய்ப்பு

மேலும், இலங்கை போக்குவரத்து சபையை வலுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி செய்யவும், மேலும் 200 பேருந்துகளை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை செய்திகள் உடனுக்குடன்
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *