பிரபல நடிகை அபிராமி கலந்து சிறப்பித்த பிரம்மாண்ட திறமையாளர் போட்டி!

0

www.iconicmediasl.com

ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில், மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சி கொழும்பு டவர் மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இப்போட்டியில், தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை அபிராமி கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இதன்போது மாணவர்களின் திறமைகளை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகள் மற்றும் சாதனைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், க்ரியேட்டிவ் சலூஷன் ஒருங்கிணைப்புக் குழுவினரும் நிகழ்வின் ஏற்பாடுகளில் இணைந்து செயல்பட்டனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை ஊக்குவிக்கும் சிறந்த தளமாக அமைந்த இந்நிகழ்வு, பங்கேற்பாளர்களின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *