சட்டத்தரணிகள் சங்கம் – ஜம்இய்யத்துல் உலமா முக்கிய சந்திப்பு
நீதித்துறை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (13) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தம் குறித்த தமது நிலைப்பாடுகளையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இச்சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் உப செயலாளர் லகித வகிஷ்ட ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டு விடயங்களை முன்வைத்ததுடன், தமது நிலைப்பாடுகள் அடங்கிய கையேட்டு பிரதியையும் ஜம்இய்யத்துல் உலமாவிடம் கையளித்தனர்.
ஜம்இய்யா தரப்பில் உப தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் நிறைவில், சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.
www.iconicmediasl.com